நண்பனின் காதலுக்கு உதவியவர் கொடூரமாக கொலை..!
நண்பனின் காதலுக்கு உதவியவரை கொடூரமாக கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெற்றிவேல். திடீரென காணாமல் போனதாக போலீசில் கடந்த மாதம் 30ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றிவேலை தேடி வந்தனர். கிட்டத்தட்ட இருபது நாட்கள் கடந்த போதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன் கோட்டை கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.
அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது மதுரையை சேர்ந்த வெற்றிவேல் என்பது தெரிய வந்தது. உடனே அவனியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணையில் நடைபெற்ற நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கயத்தாறு அருகே வெள்ளம் கோட்டையை சேர்ந்த இளைஞர் மதுரை அவனியாபுரத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அப்போது தங்கையை வெற்றிவேல் நண்பர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வெற்றிவேல் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து அவர் பலமுறை வெற்றிவேலை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இதனை கண்டுகொள்ளாத வெற்றிவேல் வழக்கம்போல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த அஜய் வெற்றிவேலை கொலை செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




