மம்தா பானர்ஜிக்கு கொலை முயற்சி.. இரும்புத் தடியுடன் ஊடுருவிய நபர்..!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து ஊடுருவ முயன்ற மர்ம நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு இரும்பு தடியுடன் ஒருவர் மம்தாவின் வீட்டிற்குள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு தனிப்படை அமைத்துள்ளனர். பணியிலிருக்கும் பாதுகாப்புபிரிவினர் மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





