--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

7

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் என்ற இளைஞர் கடந்த 2009ஆம் ஆண்டு இயற்கை உபாதைக்கு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் சந்தோஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon