--- --:--:-- --

இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு நீச்சல் அடித்து அசத்திய 70 வயது பெண்மணி..!

2

கேரளாவில் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி கொண்டு பெரியாறு நதியை 70 வயது பெண்மணி ஒருவர் நீந்திக் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்தப் பெண்மணி நீச்சல் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

80 மீட்டர் அகலமுள்ள பெரிய அளவில் நதியில் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அவர் 45 நிமிடங்களில் நீந்திக்கடந்தார். நீச்சல் தெரியாமல் நதியில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நீச்சல் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon