ரயிலில் இருந்த தவறி விழுந்த பிலிப்பைன்ஸ் பெண்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் சேர்ந்த ஹரிஸ் பிலிப்பைன்சை சேர்ந்த ரைசல் என்ற தனது காதலியுடன் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி விரைவு ரயிலில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஓமலூர் அருகே உள்ள காரவள்ளி பகுதியில் வந்தபோது படிக்கட்டில் பயணம் செய்தால் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. அதாவது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





