--- --:--:-- --

கணவர் முகத்தில் கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய மனைவி.!

3

விழுப்புரம் மாவட்டத்தில் மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் மனைவி கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் 2 முறை அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 

நேற்றிரவு மீண்டும் மது போதையில் தகராறு செய்த நடராஜன் என்பவரின் முகத்தில் குப்பம்மாள் கொதித்த ரசத்தை ஊற்றியுள்ளார். வெந்து போன முகத்துடன் காவல் நிலையம் சென்று நடராஜனை போலீசார் சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon