--- --:--:-- --

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்கும் பணி தீவிரம்..!

5

த்தீஸ்கரில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிக்காக குஜராத் மாநிலத்தில் இருந்து ரோபோ வரவழைக்கப்பட்டது. சத்தீஷ்கர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 80 அடி ஆள்துளை கிணற்றில் கிடந்த 10 வயது சிறுவனை 4 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது.

 

ஆழ்துளை கிணற்றில் 20 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு உள்ள நிலையில் கடினப் பாறைகள் காரணமாக மூன்று மீட்டர் தொலைவில் ராகுலை மீட்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கடினமான பாறைகளில் தேள். பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சிறுவன் சுயநினைவுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோ வரவழைக்கப்பட்டுள்ளதால் விரைவில் செயல்படலாம் எனவும் மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon