--- --:--:-- --

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி விடுதி சமையலறை செயல்பட தற்காலிகத் தடை..!

9

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதிச் சமையலறையில் சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் போதிய பராமரிப்பின்மை நிலவுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டு, சமையலறையின் செயல்பாடுகளுக்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சமையலறைச் சூழலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சினைகளை 15 நாட்களுக்குள் முழுமையாகச் சரிசெய்து, உரிய அனுமதி பெற்ற பிறகே சமையலறையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை கல்லூரி நிர்வாகத்திற்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon