--- --:--:-- --

நடிகை திரிஷாவின் திருமணம் எப்போது..?

12

தமிழ் சினிமாவில் கடந்த 19 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. சில ஆண்டுகளுக்கு முன் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை மீண்டும் தேடி தந்து படவாய்ப்புகளை குவித்து தந்தது 96 திரைப்படம்.

 

இதை தொடர்ந்து பிசியாக மீண்டும் பல படங்களில் நடித்து வரும் திரிஷாவின் கைவசம், பொன்னியின் செல்வன், ராங்கி, தி ரோடு மற்றும் மலையாளத்தில் ராம் என பல படங்கள் உள்ளன.

 

இந்நிலையில், நடிகை திரிஷாவின் சக நடிகையும், தோழியுமான நடிகை நயன்தாராவிற்கு சமீபத்தில் திருமணம் ஆனதை அடுத்து, திரிஷாவிற்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்க ரசிகர்கள் துவங்கிவிட்டனர். ஏற்கனவே வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் திரிஷாவிற்கு நடைபெற்றது.

 

ஆனால், சில மாதங்களிலேயே இருவரும் தங்களது உறவை முறியத்து கொண்டார்கள். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம், விரைவில் நல்ல செய்தி சொல்வாரா திரிஷா, என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon