ஆசன வாயில் லத்தியை நுழைத்து மின்சார ஷாக் கொடுத்த காவலர்கள்..!

த்தரபிரதேசத்தில் பசுவதை வழக்கில் கைதான நபரின் ஆசன வாயில் லத்தியை நுழைத்து மின்சார ஷாக் கொடுத்து காவல்நிலையத்தில் காவலர்களால் சித்திரவதை செய்து அதிர்ச்சி சம்பவம் ஏற்படுத்தியுள்ளது .உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பகுதிநேர காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

 

பசுவதையில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சட்டவிரோதமாக காவல்நிலையத்தை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. நான்கு காவலர்கள் சேர்த்து வெளியாட்களும் அந்த இளைஞரை தாக்கியதாக புகார் எழுந்தது.

 

பின்னர் தவறான நபரை கைது செய்து விட்டோம் என்பதை உணர்ந்த காவல்துறையினர் அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து வீட்டில் வந்து விட்டு விட்டு சென்றுள்ளனர். அப்பொழுது உடல்நிலை மோசமானதால் அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

காவல்நிலைய விசாரணையில் ஈடுபட்ட போது அவரது ஆசன வாயை சுருக்கி எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நான்கு காவலர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.