--- --:--:-- --

ஆதவ் அர்ஜுனவா பதவி விலக ரெடியா இருக்க சொல்லுங்க – திமுக வேட்பாளர் பரந்தாமன்

1

குதிரை பேரத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியதால், ஆதவ் அர்ஜுனா பதறிபோய்விட்டார். அக்.9ஆம் தேதி பதவி விலகல் கடித்ததை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தயாராக வைத்துக்கொள்ள சொல்லுங்கள்” என்று திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

 

 

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமன் மதுராந்தகம் தொகுதி மொரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,”காலை முதல் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகச் சென்று வருகிறேன். அவர்கள் முக மலர்ச்சியுடன் ஆர்வத்துடன் வாக்களித்துவருவதாகத் தெரிவித்தார்.

 

திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “திமுகவுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல மதுராந்தகம் மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக வரலாறு படைக்கும், மக்களின் முக மலர்ச்சியில் திமுகவின் வெற்றி தெரிகிறது; களத்தில் நிற்பவர்கள் எல்லோருமே போட்டிதான், ஆனால் வெற்றி பெறுவது உதயசூரியன்தான் என்று திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்தார்.

 

மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திமுக வெற்றி பெற்றால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று பேசியிருந்தார். இது தொடர்பாக மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசும்போது, “குதிரை பேரத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியதால் ஆதவ் அர்ஜுனா பதறிபோய்விட்டார். அக். 9ஆம் தேதி பதவி விலகல் கடித்ததை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தயாராக வைத்துக்கொள்ள சொல்லுங்கள்” என்றார்.

 

இடைத்தேர்தல்கள் எப்போதும் ஆளும் கட்சிக்குத்தான் ஆதரவாக இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பரந்தாமன், “அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் திமுக இடைத்தேர்தல்களில் வென்ற வரலாறு இருக்கிறது. அதுபோல மீண்டும் மதுராந்தகம் வரலாற்றைப் படைக்கும்..” என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon