5 நாள் பயணமாக ஊட்டி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..!

மிழக ஆளுநர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக ஊட்டி வந்தடைந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தடைந்தார்.

 

ராஜ்பவன் தாவரவியல் பூங்கா, கூடைப்பந்து, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி காலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.