--- --:--:-- --

தமிழகத்தில் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

7

தமிழ்நாட்டில் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் வகையிலும், சீரமைக்கும் வகையிலும் சில முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (ELCOT) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் கே.பி. கார்த்திகேயன், தற்போது பேரூராட்சிகள் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

இவருக்காக ஐ.ஏ.எஸ். கேடர் விதிகளின்படி, ஒரு வருட காலத்திற்கு அல்லது அது தொடர்பான தேவைகள் முடியும் வரை பேரூராட்சிகள் இயக்குநர் தற்காலிகப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது முன்பு பேரூராட்சிகள் இயக்குநராகப் பொறுப்பு வகித்த பி. பிரியங்கா, தற்போது மின்னணு ஆளுமை (e-Governance) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் (CEO) செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அயல்பணியில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள பி. விஷ்ணு சந்திரன், ‘எல்காட்’ (ELCOT) நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான அயல்பணி நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணையின்படி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கான அயல்பணி நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணையின்படி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon