பேருந்து நிறுத்தத்தில் த.வெ.க. பூத்: அகற்றிய போலீஸ்
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், வேங்கைப்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தவெக சார்பில் பூத் அமைக்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையில் இந்த பூத் அமைக்கப்பட்டிருந்ததால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து புகார்கள் எழுந்தன.
பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் ஏற்பட்ட இடையூறைக் கருத்தில் கொண்டு, உடனடியாகச் செயல்பட்ட போலீசார் அந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்த தவெக பூத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




