--- --:--:-- --

தாராபுரம்: த.வெ.க. பூத் ஏஜெண்டுக்கு கடும் எதிர்ப்பு..!

9

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கவுண்டச்சிபுத்தூர் வாக்குச்சாவடி எண் 126-ல், தவெக சார்பில் சரவணன் என்பவர் பூத் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டு உள்ளே அமர வைக்கப்பட்டார். ஆனால், அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளராக இல்லாத ஒருவர் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டதற்கு விதிகளை சுட்டிக்காட்டி திமுக மற்றும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 

வாக்குப்பதிவை நிறுத்தச் சொல்லி தவெகவினர் வாக்குச்சாவடி அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு தற்காலிகமாகத் தடைபட்டது. தேர்தல் அதிகாரியின் தலையீட்டால் தவெக ஏஜெண்ட் வெளியேற்றப்பட்டார்.

 

 

பின்னர் தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி அவர் மீண்டும் உள்ளே அமர வைக்கப்பட்டபோது, திமுக மற்றும் அதிமுகவினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon