--- --:--:-- --

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்..!

6

கோவை மாவட்டம் அருகே ஓடும் பேருந்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர் சுந்தரம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி. அழகு கலை நிபுணரான இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவதற்காக பொள்ளாச்சியிலிருந்து அரசு பேருந்தில் ஏறி புறப்பட்டுள்ளார்.

 

ஓட்டுனர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசக்தி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த படிக்கட்டு பக்கம் வந்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர் பேருந்தில் இருந்து வெளியே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon