--- --:--:-- --

குட்டையில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

7

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற மூதாட்டி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலியானார்.பெரிய அளவிலான கல் குவாரி உள்ளது. இந்த குட்டையில் தற்பொழுது அதிக அளவில் தேங்கி நிற்கிறது.

 

பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய புஷ்பா தனது மகன்களை பேரக்குழந்தைகளுடன் இன்று மதியம் 2 மணியளவில் துணி துவைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது நீச்சல் தெரியாத நிலையில் தனது பேர குழந்தைகளான, சாமிநாதன் என்பவரின் குழந்தை வினோதினி, ஷாலினி, கிருஷ்ணராஜ் ஆகிய மூவரும் தண்ணீரில் இறங்கி மூழ்கியுள்ளனர்.

 

அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக புஷ்பாவும் தண்ணீரில் இறங்கியதால் அவரும் எதிர்பாராதவிதமாக மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இவர்களை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

இருப்பினும் இவர்கள் நான்கு பேரையும் உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon