வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியீடு..!
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவேல் மலைவாழ் மக்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பசுமை வீடுதிட்ட பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
வீடியோவில் பயனாளிகள் ஐந்து பேரும் வட்டார வளர்ச்சி இருந்த அறைக்குள் வருவதும் அதில் ஒருவர் தாங்கள் 5 பேர் வந்துள்ளதாகவும் ஒரு வீட்டிற்கு 3 ஆயிரம் வீதம் 15 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளதாகவும் 15,000 ரூபாயை கொடுக்கிறார்.
பணத்தை பெற்றவர் மீதி தொகையை பச்சைமலை வரும்பொழுது திருப்பி தரவேண்டும் என கூறுகிறார். இந்த தொகையில் அனைத்து வேலைகளையும் முடித்து விடுவார் என மற்றொருவர் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





