திருநங்கை என்று சொல்லமுடியாது அழகுடனும் நளினத்துடன் பெண் போலவே மலையாள ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷெரின். மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.
நீண்ட நேரமாக அவரது வீட்டு கதவு திறக்க படாத நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய பிறகு ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினை காரணமாக அவர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள கணக்குகளை மனவருத்தத்துடன் பல பதிவுகள் போட்டு இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரது சடலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைத்து பிறகு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட.து ஷெரின் தற்கொலை தொடர்பாக நண்பர்களிடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. ஷெரினுக்கு ஒரு காதல் இருந்ததும், திருநங்கை என்பதை காரணம் காட்டி காதலன் பிரிந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.