--- --:--:-- --

சிறுத்தையிடம் மாட்டிக்கொண்ட வளர்ப்பு நாய்..!

4

நீலகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தையின் பிடியில் சிக்கிய வளர்ப்பு நாய் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தப்பி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

பெரிய சோலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வளர்ப்பு நாய் பலத்த காயங்களுடன் நிற்பதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை தாக்கியுள்ளது.

 

நீண்ட நேர போராட்டத்தின் பிறகு நாய் தப்பித்த காட்சி பதிவாகியிருந்தது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon