--- --:--:-- --

உணவகத்தில் 133 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் ..!

4

சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டு போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சவர்மா சாப்பிட்டவர்கள் பாதிப்புக்குள்ளான தகவலால் தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் சோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அசைவ உணவகங்கள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்களில் சோதனையிட்டதில் 133 கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon