--- --:--:-- --

காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று காதலன் தற்கொலை.!

5

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

 

அதிபள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷும், காவியாவும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக காதலித்து இறுதியில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தனியாக பேசலாம் என வரவழைத்து மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரது தலையில் சுட்டுக் கொன்றுள்ளார். அதை தொடர்ந்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon