--- --:--:-- --

அம்பத்தூரில் சரவணகுமார் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

7

சென்னையை அடுத்த அம்பத்தூரில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் ஆயுதப்படை காவலர் ஆவார். அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து அம்பத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon