--- --:--:-- --

மே 8 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

7

ஜோத்பூர் வன்முறையைத் தொடர்ந்து மே 8ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இருதரப்பினரிடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து நடந்த கல்வீச்சு தாக்குதலில் 5 போலீஸார் காயமடைந்தனர்.

 

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இந்நிலையில் இந்த ஊரடங்கை மே 8 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவை மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon