--- --:--:-- --

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30ஆக உயர்வு..!

1

சென்னை ஐஐடியில் 3 நாட்களுக்குள் 30 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. 19ஆம் தேதி சென்னையில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

இதில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போது தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்ட சுகாதாரத்துறை செயலாளர் அங்குள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

 

அப்பொழுது மேலும் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon