சென்னையை போல கோவையிலும் விரைவில் ட்ரோன் பிரிவு
சென்னையைப் போல் கோவையிலும் டிரோன் பிரிவை தொடங்க திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களில் டிரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்க காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சியின் உயர் பாதுகாப்பு காரணமாக பல்வேறு இடங்களில் 23 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





