--- --:--:-- --

ரன்பீர் ஆலியாவுக்கு 17 இல் திருமணமா..?

6

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை ஆலியா பட்டும் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி எளியமுறையில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் திருமணம் நடக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அலியாபட்டின் தாத்தா திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆர்வமாக இருப்பதாகவும் 17ஆம் தேதியை திருமணத்தை நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் திருமண தேதி குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon