செல்ஃபி எடுக்கும் போது ஆற்றுக்குள் விழுந்த புது மண தம்பதி..!
கேரளாவில் செல்பி எடுக்கும் பொழுது ஆற்றுக்குள் விழுந்து புதுமாப்பிள்ளை பலியானார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ரஜின், கனிகா ஆகியோருக்கு மார்ச் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதி தங்கள் உறவினர்களுடன் ஒரு ஆற்றுக்கு போட்டோ ஷூட் காக சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்குள்ள பாறையின் மீது ஏறியும் தம்பதியர் செல்பி எடுக்க முயன்றனர். அப்பொழுது கால் இடரி இருவரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
தண்ணீர் அவர்களை இழுத்துச் சென்றது. உறவினர்களும் அங்கிருந்த மக்களும் பெண்ணை மீட்டனர். ஆனால் மணமகனை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது. இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




