சூடாக இருந்த குருமா பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!
கும்பகோணம் அருகே அடுப்பிலிருந்து கொதிக்க கொதிக்க இறக்கி வைத்திருந்த பானி பூரி குருமா நிரம்பிய பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 2 வயதுசிறுவன் உயிரிழந்தான்.
அகலமான பாத்திரத்தில் நிரம்பியிருந்த குருமாக்குள் தவறி விழுந்ததால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஒருவார கால சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





