டீ, காபி விலை உயர்வு..!
வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதையடுத்து தமிழகத்தில் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த தேனீர் கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது.
இதைப்போல் கடைகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் ஒன்றின் விலை 250 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல பாலின் விலையும் அதிகரித்துள்ளதால் டீசல் விலையும் உயர்த்த கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
டீ விலை 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. காபியின் விலையும் உயரும் என கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





