--- --:--:-- --

தாய், தந்தையை கொலை செய்த மகன் கைது..!

7

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாய் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டான். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பாலு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

 

தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாலு தனது பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ரங்கசாமியும், அவரது மனைவியும் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

 

நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தியதில் தனது பெற்றோரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon