ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு ஒரு சீட் இலவசம்..!
ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் சேர ஒரு இலவச சீட்டு வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்ததாவது சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை திருநங்கைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் அவர்கள் முன்வந்தால் அவர்களுக்கான கட்டணத்தை பல்கலைக்கழகமே செலுத்தும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
வரும் கல்வியாண்டு முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





