கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கவில்லை..!
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை கட்டாயமாக வில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கொரொனா தடுப்பூசி தொடர்புடைய வழக்கில் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார். 100% தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் ஆனால் அது கட்டாயம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





