பெட்ரோல் , டீசல் விலை உயர்வு..!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக விலை அதிகரித்துள்ளது . இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் 75 காசுகள் விலை உயர்ந்து 102 ரூபாய் 91 காசுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 51 காசுகளும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 52 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் வருந்துகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




