--- --:--:-- --

பெண்களுக்காக போராடும் இயக்கம் திராவிட இயக்கம் : கனிமொழி

8

பெண்கள் உரிமைக்காகப் போராடும் இயக்கம் திராவிட இயக்கம் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெண்கள் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று துவக்கி வைத்தார்.

 

அப்பொழுது கல்லூரி மாணவிகளிடம் பேசிய கனிமொழி திறமைகள், கனவுகளை நோக்கி பெண்கள் பயணம் செய்ய வேண்டும் என்றும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

 

பெண்கள் உரிமைக்காக போராடிய இயக்கம் திராவிட இயக்கம் என்றும் தைரியத்துடன் பயணம் செய்யும் போது வெற்றி உங்களை வழிநடத்தும் என்றும் பேசினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon