--- --:--:-- --

சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை பாவனா..!

7

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 26 ஆவது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. முதலமைச்சர் பினராயி விஜயன் விழாவை தொடங்கி வைத்தார். அப்பொழுது திடீரென புதிய விருந்தினராக வந்த நடிகை பாவனா மேடைக்கு அழைக்கப்பட்டார்.

 

5 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருந்தவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் இஸ்தான்புல் தீவிரவாத தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்து உயிர் தப்பியவர் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

 

எட்டு நாட்களுக்கு நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளின் 173 படங்கள் திரையிடப்படுகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon