பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்வு..!
பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன. ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 120 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை.
நேற்று உத்திரபிரதேசத்தில் கடைசிகட்ட தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 139 டாலராக உயர்ந்து விட்டது.
இந்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இதனையடுத்து லிட்டருக்கு 6 ரூபாய் வரை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





