--- --:--:-- --

மனைவியை கொன்று உடலை வீட்டில் வைத்திருந்தவர் கைது..!

7

மதுராந்தகம் அருகே மனைவியை கொன்று உடலை இரண்டு நாட்கள் வீட்டில் வைத்திருந்த கணவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுரை அடுத்துள்ள மதுராந்தகத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். விவசாயம் செய்து வந்த அவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தீஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

 

அவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவியின் நகைகளை அடகு வைத்து பயிரிட்ட சிலம்பரசனுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நகைகளை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்தவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்து உறங்கியுள்ளார். விஷயத்தை அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon