--- --:--:-- --

நூலிழையில் உயிர்பிழைத்த இளைஞரின் வீடியோ வைரல்..!

2

பரொருவர் நொடிப்பொழுதில் அதிர்ஷ்டவசமாக தானிருந்த இடத்திலிருந்து நகர்ந்ததால் தன்னை வேகமாக இடித்து தள்ள இருந்த காரில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். விதி வலியது என்று கூறுவர். வாய்க்கால் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.

 

பனை மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தவர்களும் உண்டு. அந்த வகையில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் நொடிப்பொழுதில் எமன் விரித்த வலையில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

 

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஏதோ புலம்பிக் கொண்டிருந்த அவர் சிறிது நொடியில் அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்கிறார். பின்னர் தரையில் காலை ஊன்றி உதைக்கிறார்.

 

அந்த நேரத்தில் அவர் நின்றிருந்த இடத்தில் மின்னல் வேகத்தில் வந்த கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் நூலிழையில் உயிர் தப்பி விடுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon