--- --:--:-- --

ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை..!

1

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடன் ஆணையர் பழனிகுமார் ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துறை இயக்குனர் சேதுராம் வர்மா மற்றும் இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பள்ளியை பாதிக்காத வகையில் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 5, 12 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக பயிற்சி முகாம் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon