தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பு..!

சேலம் வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.  புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மலைப்பாம்பு விழுந்ததாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

 

மீட்கப்பட்ட 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.