ஜோடியாக கைதான ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்..!
சமூக வலைத்தளங்களில் பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் கைதாகியுள்ளனர். ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணும் சிக்கந்தர் என்பவரும் யூடியூப் சேனல் நடத்தி வந்தனர்.
அவர்கள் பெண்கள் குழந்தைகளை ஆபாசமாக பேசுவதாக பல மாதங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களை கண்டித்து கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் திலகா என்பவர் தங்களின் யூடியூப் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது.
சூர்யா சிக்கந்தர் ஆகியோர் இது குறித்து கொச்சைச் சொற்களால் பேசியும் அதில் செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் வெளியிடவும் செய்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க மதுரையில் தலைமறைவாக இருந்த சிக்கந்தர் மற்றும் சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிக்கந்தர் மற்றும் சூர்யா மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களின் யூடியூப் பக்கத்தை முடக்கும் திட்டமிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





