அடிபட்ட குரங்குக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்த வீடியோ..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வண்டியில் அடிபட்டு குரங்கு ஒன்றுக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்பவரின் மனித நேயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சரிவான பகுதியில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன. அங்குள்ள குரங்குகள் உணவுகளை சாப்பிட வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை குரங்கு ஒன்று வண்டியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பிரபு என்பவர் குரங்கைத் தூக்கி பைப்பிலிருந்து தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்து உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





