--- --:--:-- --

தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்புக்கு 10 லட்சம் நிவாரணம்..!

4

லையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பத்து லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

 

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கி குண்டு பாய்ந்து தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon