முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 வது ஆண்டு நினைவு தினம்..!

மைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக முதலமைச்சராகவும், அதிமுக செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

 

இதேபோன்று இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள்,முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

நினைவிட வளாகத்தில் சிறந்த மேடை அமைத்து உறுதிமொழி ஏற்றனர். டிடிவி தினகரன் மற்றும் சசிகலா பதினோரு மணிக்கு மேல் அஞ்சலி செலுத்த வருகின்றனர்.