நிச்சயதார்த்தம் செய்த பெண் ஏமாற்றியதால் தற்கொலை முயற்சி ..!

யிலாடுதுறை அருகே நிச்சயதார்த்தம் செய்த பெண் ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான மணமகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிளியனூர் சின்னதம்பி, வில்லியனூரை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கடந்த ஜூன் இருபத்தி எட்டாம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

இதனை அடுத்து சின்னத்தம்பி மணப்பெண்ணுக்கு 2 பவுன் தங்கச் செயின், 13 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பெண்ணின் தந்தைக்கு பைக் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கி தந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் சின்னத்தம்பி பேசியபோது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியதாக தெரிகிறது.

 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சின்னதம்பி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடும்பத்தினருக்கு தாங்கள் செலவு செய்ததை திரும்பப் பெற்றுத் தருமாறு மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.