மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டு..!

திருவாரூரில் மாணவரின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் வசந்த். இவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது செம்மறி ஆடுகள் மீது மோதி கீழே விழுந்ததில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளார்.

 

அப்போது அந்த வழியாக வந்த மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் அவரது இதயம் செயலிழந்து அவசரகால முதலுதவியாக இதய பகுதியை கைகளால் மசாஜ் சிகிச்சை செய்ததில் ரத்த ஓட்டம் சீராகி மாணவர் இதயம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

 

உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.