ஜூலியை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த நபர்..!

பிக் பாஸ் புகழ் நடிகை ஜூலி என்கிற மரியா ஜூலியானா என்ற பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மனீஷ் என்பவர் பல்சர் பைக், வீட்டுக்கு தேவையான உபகரணங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை வாங்கி தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என மோசடி செய்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த மரியா ஜூலியானா அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர் ஜூலியிடமிருந்து பெற்ற பிரிட்ஜ், தங்க நகைகளை போலீசார் முன்னிலையில் மனீஷ் ஒப்படைத்துள்ளார். மீதமுள்ள பொருட்களையும் ஒப்படைத்து விடுவதாக கூறி அதன் அடிப்படையில் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு மனீஷை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.