--- --:--:-- --

காலணிக்குள் வைத்து அமெரிக்க டாலரை கடத்த முயற்சி..!

7

மதுரையில் இருந்து இலங்கைக்கு அமெரிக்க டாலரை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இலங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த 111 பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

அப்பொழுது இரண்டு பேரும் ஒரே மாதிரியான காலணியை அணிந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவர்களை சோதனை செய்ததில் அமெரிக்க டாலர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon