--- --:--:-- --

அக்காவை கொலை செய்ததால் தம்பி ஆத்திரம்..!

5

மதுரையில் அக்காள் கொலைக்கு பழி தீர்க்க அரிவாளுடன் விரட்டிய தம்பி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த 20 வயதுடைய பெண் மதுரை பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி காதலித்துள்ளார்.

 

இருவரும் நெருக்கமாக இருந்ததால் அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். இதனிடையே இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நிலையில் இருவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் 2ஆம் தேதி திருமணம் முடிந்த நிலையில் மனைவியை அவனியாபுரம் அருகே அழைத்து சென்ற ஜோதிமணி கர்ப்பவதியான மனைவியை கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி ஜோதிமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

ஜாமினில் அவர் வெளியே வந்த நிலையில் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கிளாடிஸ் ராணியின் தம்பி வந்துள்ளார். இந்த நிலையில் போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர். கொலை செய்ய முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon